உயிர், மனிதன், பணம், செல்வம்
Medium | 20.01.2026 15:49
உயிர், மனிதன், பணம், செல்வம்
சகல உயிர்களும் இந்த பேரண்டமும் உருவான முதல் விகலை வினாடி முதல்
என்ன பன்னனும் என்ன பன்ன கூடாது, எப்படி வாழனும் எப்படி வாழ கூடாது அதன் தேவைகள் என்ன இப்படி எல்லாமே இயங்க ஒரு கட்டமைப்பு உள்ளது.
அதை உருவாக்கிய மாபெரும் சக்தி ஒன்று உள்ளது.
அது நமது 6 ஆம் அறிவு மற்றும் புலமைக்கு அப்பாற்பட்டது.
அது அப்படியே அதன் கட்டமைப்புக்குள் இயங்க விடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு?
அழகான, ஒழுங்கான இந்த கட்டமைப்பை சீர் குலச்சா ஏற்படும் விளைவுக்கு பெயர் என்ன தெரியுமா அதுதான் வாழ்க்கை.
6 ஆம் அறிவு, மனித இனத்திற்கு செயல்பட துவங்கிய முதல் நொடி முதல், மனித உணர்வு காணும் காட்சிகள் எல்லாவற்றிலும் ஆளுமை செய்ய துவங்கினான்.
மேற்குறிப்பிட்ட அந்த பெரும் சக்தி இந்த மனித இனத்திற்கு சோதனை கொடுக்கும் விதமாக மனிதனை மடை மாற்றும் ஒரு எதிர் சக்தியையும் களத்தில் இறக்கியது. அன்று துவங்கியது இந்த கலகங்கள்.
கால ஓட்டத்தில் மனிதன் தேவைக்காக உருவாக்கிய பல விஷயங்களில் அந்த எதிர் சக்தியின் பங்கு இல்லாமலில்லை. ஆனால் அதை உணர மறுக்கும் நமது சிந்தனை.
நாம் உணர வேண்டி பல கால கட்டங்களில் பல நல்ல மேதைகள் பல மாமனிதர்கள் பொட்டில் அடித்தார் போல் கற்று கொடுத்து உணர்த்தி சென்றுள்ளனர். ஆனால் நாம் அதை வாழ்வில் செயல் படுத்த தவறி அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவும் தவறி விட்டோம்.
விளைவு;
வலியவன் வாழ்வான்.
கால சரித்திரம் நமக்கு காட்டும் விஷயங்களும் இதுதான்.
எந்த மனிதனும் தமக்கு பிறக்கும் குழந்தைகள் இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என்று ஆசை கொள்வதில்லை. மாறாக தவறான வாழ்வியலை காட்டுகிறான். அதன் காரணமாக அடுத்த தலைமுறை சுயநலமிக்கதாக மாறி போகிறது.
இந்த பூமியில் குற்றங்கள் ஏன் நிகழ்கிறது. போர்களும், போதை கலாச்சாரமும் ஆபாசங்களும் குடும்ப சீர்கேடுகளும் வரிகள் உயர்வதும் வட்டி பெருகுவதும் ஏழைகள் அதிகமாவதும் பொருளாதார சீர் கேடுகளும் இன்னும் சொல்ல முடியாத பல பல பயங்கரங்கள் மலிந்து காணப்படுவதும் ஏன். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கு மனித இனத்தை கொண்டு செல்லும்.
அதன் தற்போதைய உச்சமே இப்போது நாம் காணும் உலகம்.
நாடுகளின் எல்லைகள், பொருளாதார வேறுபாடுகள்.
எதிர் சக்தியின் தூண்டுதலை உணராமல் மனிதன் செயல் படுத்தும் தவறான முடிவுகளால் எண்ணிலடங்கா பல உயிர்கள் வரலாற்றில் பலியாகி உள்ளது.
மீண்டும் அதே நிகழும்.
மீண்டும் அதே நிகழும்.
மீண்டும் அதே நிகழும்.